Header

Sri Lanka Army

Defender of the Nation

16th May 2022 17:15:16 Hours

23 வது படைப்பிரிவு புதிய தளபதி பதவியேற்பு

கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 23 வது படைப்பிரிவின் 25 வது தளபதியாக இலங்கைப் பொறியியலாளர் படையணியின் பிரிகேடியர் ஷெவாந்த் குலதுங்க, வெள்ளிக்கிழமை (6) புனானி 23 வது படைத் தலைமையகத்தில் சமய ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 23 வது படைப்பிரிவின் தளபதிக்கு 6 வது கஜபா படையணியின் படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன் பணிநிலை அதிகாரிகளால் அன்புடன் வரவேற்கப்பட்டார்.

மேலும் புதிய தளபதி அவரது அலுவலகத்தில் 'செத் பிரித்' பாராயணங்களுக்கு மத்தியில் தனது கடமைகளை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட அழைக்கப்பட்டார்.

பின்னர் இராணுவ சம்பிரதாயங்களுக்கு அமைவாக புதிய தளபதி அனைத்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு படைப்பிரிவுக்கான எதிர்காலம் குறித்து உரையாற்றினார்.

இந்த நிகழ்வில் பிரிகேட் தளபதிகள் ,23 வது படைப்பிரிவின் பணிநிலை அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.