Header

Sri Lanka Army

Defender of the Nation

17th May 2022 21:00:31 Hours

கூரகலவில் மறுசீரமைக்கப்பட்ட வழிபாட்டு அம்சங்கள் மும்மணிகளின் ஆசிர்வாதம் மிகுந்த நாளி்ல் பக்தர்களிடம் கையளிக்கப்பட்டது.

வண. வத்துரகும்புறே தம்மரத்ன நாயக்க தேரரின் அழைப்பையேற்று பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் நன்கொடையாளர்களுடன் இணைந்து “அசி திசி ஷாகமுனி மஹாசேய” பொதுமக்கள் வழிப்பாட்டிக்காக திறந்து வைத்தார். மேற்படி நிகழ்வில் கலந்துகொண்ட பக்தர்களின் “சாது சாது” என்ற பக்தி கோசங்களுக்கு மத்தியில் தூபி திறந்து வைக்கப்பட்ட வேளையில் தூபியின் மீது ஹெலிகொப்டரிலிருந்து மலர் தூவப்பட்டது.

தூபியின் மீது போர்த்தப்பட்டிருந்த சீலையையை அதன் மேலே கட்டப்பட்டிருந்த பலூன்கள் காற்றில் கொண்டு சென்றதையடுத்து திறந்து வைக்கப்பட்ட இத்தூபியின் நிர்மாண பணிகளை நிறைவுச் செய்வதற்கு அதிமேதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அவர்கள் வழங்கிய வழிகாட்டல் மற்றும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் இத்திட்டத்தை நனவாக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட விடாமுயற்சி ஆகியவற்றிற்காகவும், இராணுவத்தினர், சிவில் பாதுகாப்பு திணைக்கள ஊழியர்கள் மற்றும் நூற்றுக்கணக்கிலான பௌத்தர்கள் வழங்கிய பங்களிப்பை நினைவுகூர்ந்த வண. வத்துறகும்புரே தம்மரத்தன தேரர் 50 வருடகால வரலாற்று பாரம்பரியம் கொண்ட புராதன விகாரையை மக்கள் வழிப்பாட்டிக்கு ஏற்றவாறு மறுசீரமைத்தமைக்கும் நன்றி தெரிவித்தார்.

அதனையடுத்து மாஸ்டர் கயிட் பதிப்பகத்தின் (Master Guide publications Ltd) திருமதி திஸ்னா வணிகசேகர மற்றும் திரு சந்திரசேன அவர்களின் நிதி உதவியை கொண்டு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் ஆளணி வளத்தை பயன்படுத்தி புதிதாக நிர்மாணிக்கப்பட்ட “அசிதிசி ஷாக்ய சுகந்த” பிரித் மண்டபத்தின் பெயர் பலகை ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.அடுத்ததாக, புனித வெள்ளரசு மரத்தை சுற்றி அமைக்கப்பட்ட போதிகராய (சுற்றுச் சுவர்) திறப்பு நிகழ்வில் இராணுவத் தளபதியவர்களுடன் இணைந்து நன்கொடையாளர்களால் திறந்து வைக்கப்பட்டதை தொடர்ந்து காலை நேர நிகழ்வுகள் நிறைவை எட்டின.

இரண்டாம் அத்தியாயமாக வரலாற்று பாரம்பரியத்தை கொண்டுள்ள பலாங்கொடை கல்தொட்ட கூரகல ராஜ மகா விகாரையின் “அசிதிசி சுகந்த குட்டிய” எனப்படும் புனித தாது சந்நிதானம் தேசிய வெசாக் தின நிகழ்வுகளுடன் திறந்து வைக்கப்பட்டது.மேற்படி சந்நிதான திறப்பு நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொண்ட பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா , இராணுவ பௌத்த சங்கம், நெத் எம்எம் வானொலிச் சேவை மற்றும் ஏனைய நன்கொடையாளர்களுடன் இணைந்து திறந்து வைத்தார்.இவ் வளாகத்தின் நிர்மாண பணிகள் இலங்கை இராணுவத்தின் மனிதவளம் மற்றும் பொறியியல் நிபுணத்துவத்தை கொண்டு கண்கவர் வகையில் நிர்மாணிக்கப்பட்டதோடு சிவில் பாதுகாப்பு படையினரின் உதவியும் இத்திட்டத்திற்கு கிட்டியிருந்தது.

இவ்வளாகத்தில், (சங்கவாசய) பிக்குகளுக்கான வாசஸ்தலம், நிர்வாக கட்டிடம், (தான ஷலவா) அன்னதான மண்டபம் என்பவற்றை உள்ளடக்கிய நான்கு மாடிக்கட்டிடத்தை ஜெனரல் ஷவேந்திர சில்வா, நன்கொடையாளர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பக்தர்களுடன் இணைந்து 'செத்பிரித்' பாராயணங்களுக்கு மத்தியி்ல் திறந்து வைத்தார்.

சிரச டீவி மற்றும் நெத் எப்எம் வானொலிச் சேவை ஆகியன இத்திட்டத்தின் பிரதான ஊடக அனுசரணையாளர்களாக செயற்பட்டனர்.