13th May 2022 18:14:15 Hours
இராணுவத் தளபதியின் 'இராணுவ முன்னோக்கி வியூகம் 2020 - 2025' க்கு. அமைவான ‘’இதயமுள்ள இராணுவத்தினரின்’’ எண்ணக்கருவிற்கு அமைவாக யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 55 வது படைப்பிரிவு படையினரால் யாழ்ப்பாணம் உடுத்துறை பிரதேசத்தில் கணவனை இழந்த மேலும் ஒரு விதவை ஒருவருக்கு புதிய வீடு நிர்மாணிக்க அடிக்கல் நாட்டப்பட்டது.
யாழ் பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா மற்றும் 55 வது படைபிரிவு தளபதி பிரிகேடியர் பிரசன்ன குணரத்ன ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க இவ் வீட்டினை நிர்மாணிப்பதற்கான நிதி அனுசரணையினை இப்போது வெளிநாட்டில் வசிக்கும் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ரவி ரத்னசிங்கம் அவர்களினால் வழங்கப்பட்டது.
திருமதி வி.வசந்தகுமாரி என்ற விதவை தாய் தனது பிள்ளைகளுடன் பொருளாதார நெருக்கடியுடன் வாழ்ந்து கொண்டிருந்த போது அவரது வறிய நிலை 55 வது படைபிரிவினருக்கு தெரியப்படுத்தப்பட்டது. இதன்படி, இந்த புதிய வீட்டை நிர்மாணிப்பதற்கான அடிக்கல்லை திங்கட்கிழமை (9) 55 வது படைபிரிவின் தளபதி பிரிகேடியர் பிரசன்ன குணரத்ன நாட்டினார்.
12 வது விஜயபாகு காலாட்படை படையணியின் கட்டளை அதிகாரியினால் 55 வது படைபிரிவின் தளபதியின் வழிகாட்டலின் கீழ் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.