Header

Sri Lanka Army

Defender of the Nation

13th May 2022 18:23:34 Hours

இராணுவத்தின் ஒருங்கிணைப்பில் 60 வறிய குடும்பங்களுக்கு நிவாரணப் பொதிகள்

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 23 வது இலங்கை சிங்க படைப்பிரிவின் படையினர் கோமாரி, பொத்துவில், பனாமா, செங்கமுவ மற்றும் ஹுலன்னுகே ஆகிய பகுதிகளில் வசிக்கும் 60 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச உலர் உணவுப் பொதிகளை ஞாயிற்றுக்கிழமை (1) வழங்கி வைத்தனர்.

பயனாளிகள் அந்தந்த பகுதிகளின் கிராம சேவையாளர்களின் ஒத்துழைப்புடன் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந் நிகழ்விற்கான அனுசரனையினை அறுகம்பே விஸ்டா ஹோட்டலின் தலைவர் திரு.கெமுனு பெரேராவினால் அனுசரணை வழங்கப்பட்டதுடன் 60 உலர் உணவுப் பொதிகளும் சுமார் 261,000.00 ரூபாவிற்கும் அதிக பெறுமதியானவை என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் 23 வது சிங்க படையணி கட்டளை அதிகாரி, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பயனாளிகளுடன் கலந்து கொண்டனர் அத்திடன் பயனாளிகள் இராணுவத்தின் முன்முயற்சி மற்றும் ஒருங்கிணைப்புக்கு நன்றி தெரிவித்தனர்.