Header

Sri Lanka Army

Defender of the Nation

16th May 2022 14:54:11 Hours

புதிய கிழக்கு தளபதி கடமைகளை பொறுப்பேற்றார்

இலங்கை சிங்கப் படையணியின் மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன வெலிகந்தவில் அமைந்துள்ள கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 23 வது தளபதியாக வெள்ளிக்கிழமை (06) கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

அதனையடுத்து தலைமையக வளாகத்திற்கு வருகை தந்த தளபதிக்கு இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டதோடு, சிரேஷ்ட அதிகாரிகள் சிலருடன் மத அனுட்டானங்களிலும் பங்கேற்றார்.

பின்னர் மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன அவர்கள் அதிகாரிகள் மற்றும் படையினருக்காக நிகழ்த்திய உரையில் இராணுவத்தின் நற்பெயரை பாதுகாப்பதற்காக ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

கிழக்கு முன்னரங்க பாதுகாப்பு பராமரிப்பு பிரதேச தளபதி,படைப்பிரிவு தளபதிகள், பிரிகேட் தளபதிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளும் சிப்பாய்களும் புதிய தளபதி பொறுப்பேற்கும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

மேற்படி நியமனத்தை ஏற்பதற்கு முன்னதாக மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன அவர்கள் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள 57 வது படைப்பிரிவு தளபதியாக நியமனம் வகித்தார்.

மேஜர் ஜெனரல் லால் சந்திரசிறி அவர்களின் ஓய்வையடுத்து மேற்படி நியமனம் புதியவருக்கு வழங்கப்பட்டுள்ளது.