Header

Sri Lanka Army

Defender of the Nation

16th May 2022 14:50:46 Hours

வெளியேறும் கிழக்கு தளபதிக்கு இராணுவ மரியாதை

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி பதிவியிலிருத்து விடுகை பெறும் மேஜர் ஜெனரல் லால் சந்திரசிறி அவர்களுக்கு கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக படையினரால் வியாழக்கிழமை (05) பிரியாவிடை நிகழ்வொன்று தலைமையக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையுடன் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டதை தொடர்ந்து தளபதியவர்கள் தனது பதவிக்காலத்தில் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினர் வழங்கிய ஒத்துழைப்புக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இராணுவ சம்பிரதாயங்களுக்கமையான நிகழ்வுகளின் நிறைவில் இடம்பெற்ற அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் கிழக்கு முன்னரங்க பாதுகாப்பு பராமரிப்பு பிரதேச தளபதி , 22,23 மற்றும் 24 ஆம் படைப்பிரிவுகளின் தளபதிகள், பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்துகொண்டிருந்தனர்.