Header

Sri Lanka Army

Defender of the Nation

08th May 2022 14:40:04 Hours

இராணுவ தலைமையகத்தின் புதிய நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் பொறுப்பேற்பு

இராணுவ தலைமையகத்தின் 34 வது நிறைவேற்று பணிப்பாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் சுவர்ண போதொட்ட வியாழக்கிழமை (05) கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதன்போது, புதிய நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மத அனுட்டானங்களுக்கு மத்தியில் பதவியேற்புக்கான உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிடுகையில் அலுவலகத்தின் பதவி நிலை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டிருந்தனர்.

மேஜர் ஜெனரல் சுவர்ண போதொட்ட அவர்கள் இந்த நியமனத்தை பொறுப்பேற்பதற்கு முன்னதாக 61 வது படைப்பிரிவு தளபதியாக நியமனம் வகித்திருந்ததோடு, மேற்படி நியமனத்தை வகித்த மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸெல்ல அவர்கள் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியாக நியமன் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.