Header

Sri Lanka Army

Defender of the Nation

08th May 2022 10:33:08 Hours

நன்கொடையாளர்களின் உதவியுடன் 543 வது பிரிகேடினரால் பாடசாலை பாதணிகள் வழங்கி வைப்பு

கண்டி தர்மராஜ கல்லூரியின் பழைய மாணவர்களில் ஒருவரான திரு ரவி ராஜபக்ச அவர்களின் ஒருங்கிணைப்பில் பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்கும் “சுவேஷினி” அறக்கட்டளையின் உதவியை கொண்டு 54 வது படைப்பிரிவின் 543 வது பிரிகேடினரால் 54 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன வீரசேகர அவர்களின் வழிகாட்டலின் கீழ் வியாழக்கிழமை (05) மன்னாரிலுள்ள 110 வறிய மாணவர்களுக்கு பாடசாலை பாதணிகள் வழங்கிவைக்கப்பட்டன.

மன்னார் கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இணைப்பாளர்கள் மற்றும் நன்கொடையாளர்களும் கலந்துகொணடிருந்ததோடு, 54 வது படைப்பிரிவு தளபதி, 543 வது பிரிகேட் தளபதி, 54 வது படைப்பிரிவின் சிவில் ஒருங்கிணைப்பு அதிகாரி, 12 வது பீரங்கி படையணியின் கட்டளை அதிகாரி, அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

54 வது படைப்பிரிவின் தளபதி மற்றும் மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோர் நிகழ்வின் பிரதம விருந்தினர்களாக கலந்துகொண்டிருந்தனர்.