Header

Sri Lanka Army

Defender of the Nation

08th May 2022 10:26:37 Hours

9 வது தேசிய பாதுகாவலர் படையணியினரால் பாடசாலைக்கு மனிதாபிமான உதவி

முல்லைத்தீவு உடையார்கட்டு தேசிய பாடசாலையின் வேண்டுகோளுக்கிணங்க முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 68 வது பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 681 வது பிரிகேடின் 9 வது தேசிய பாதுகாவலர் படையணியினரால் பாடசாலையின் பெயர் பலகை மறுசீரமைக்கப்பட்டது.

3 பெற்றோர்கள் மற்றும் 6 சிப்பாய்கள் அடங்கிய குழுவினரால் மேற்படி பணியின் நிறைவு தொடர்பில் 9 வது தேசிய பாதுகாவலர் படையணியின் கட்டளை அதிகாரியால் உத்தியோகபூர்வமாக பாடசாலை அதிபருக்கு அறிவிக்கப்பட்டது.

அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களால் மேற்படி சமூக பணியை மேற்கொண்டமைக்காக இராணுவத்தினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.