Header

Sri Lanka Army

Defender of the Nation

08th May 2022 15:30:40 Hours

இராணுவ பரசூட் வீரர்களால் 11 அடுக்குகள் உருவாக்கம்

அம்பாறை உஹன விமானப்படை முகாமில் வியாழன் (5) நடைபெற்ற ஸ்கைடைவர்ஸ் பயிற்சி அமர்வின் போது, இராணுவத்தின் பரசூட் வீரர்கள் முதன்முறையாக வானத்தில் 11 அடுக்குகளை அமைத்து மேலுமொரு மைல்கல்லை எட்டினர்.

கொமாண்டோ பிரிகேட் தளபதி பிரிகேடியர் விஜித ஹெட்டியராச்சி, கேணல் சுமல் விக்கிரமசேன, மேஜர் ஏஏஎன் அதிகாரி, மேஜர் வைஎம்என் குலதுங்க, மேஜர் டபிள்யூபீ சந்தருவன், அதிகாரவாணையற்ற அதிகாரி II பீடீஎன்பீ குணவர்தன, சார்ஜண்ட் எஸ்ஆர்என் கெலும், கோப்ரல் பீஏபிஜேபி பண்டார, பணிநிலை சார்ஜண்ட் ஐஜீஏ சமன் குமார, பணிநிலை சார்ஜண்ட்ஆர்டிடி குணவர்தன மற்றும் சார்ஜண்ட் பண்டார உள்ளிட்ட 11 பேர் அடங்கிய குழுவினரால் வரலாற்று சாகசம் வான் பரப்பில் நிகழ்த்தப்பட்டது.