Header

Sri Lanka Army

Defender of the Nation

08th May 2022 14:35:22 Hours

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியாக மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸெல்ல கடமைகளை ஆரம்பிக்கிறார்

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 13 வது தளபதியாக மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸெல்ல அவர்கள் புதன்கிழமை (04) கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த தளபதியவர்களுக்கு விஜயபாகு காலாட் படையணியினரால் இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.

அதயைடுத்து மத அனுட்டானங்களுக்கு மத்தியில் பதவியேற்புக்கான உத்தியோகபூர்வ ஆவணங்களின் கையொப்பமிட்டார்.

பின்னர் புதிதாக நியமனம் பெற்ற மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியவர்கள் குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் பதவியேற்பின் நினைவம்சமாக படைப்பிரிவு வளாகத்தில் மரக்கன்று ஒன்றினையும் நாட்டிவைத்தார்.

அதனை தொடர்ந்து மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பதவி நிலை அதிகாரிகளினால் தங்களது வகிபாகம் மற்றும் பணிகள் தொடர்பில் தளபதியவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

கடமைகயை பொறுப்பேற்றுக்கொண்டதை தொடர்ந்து படையினருக்கான உரையொன்றினை நிகழ்த்திய மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸெல்ல அவர்கள், இலங்கை இராணுவத்தின் நற்பெயரை பாதுகாப்பதற்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். அதனையடுத்து அனைத்து நிலையினருக்குமான விருந்துபசார்த்திலும் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் 61 மற்றும் 16 காலாட் படைப்பிரிவுகளின் தளபதிகள் , பிரிகேட் தளபதிகள், பணிப்பாளர்கள் மற்றும், பனாகொடை முகாமில் அமைந்துள்ள சம்மந்தபட்ட தலைமையகங்களின் நிலையத் தளபதிகள், படையணியகளின் கட்டளை அதிகாரிகள், பணி நிலை அதிகாரிகள் மற்றும் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினரும் கலந்துகொண்டனர்.

34 வருடகால இராணுவ சேவையை நிறைவு செய்துக்கொண்டு ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் லியனகே அவர்களுக்கு பதிலாக மேற்படி நியமனம் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.