07th May 2022 21:00:36 Hours
பனாகொடவில் அமைந்துள்ள மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியாக சேவையாற்றி விடைபெற்றுச் செல்லும் மேஜர் ஜெனரல் கித்சிறி லியனகே அவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (1) மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையுடன் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.
அதயைடுத்து படையினருடன் கலந்துரையாடிய மேஜர் ஜெனரல் லியனகே அவர்கள் பதவிக்காலத்தில் தனக்கு வழங்கிய ஒத்துழைப்புக்களை நன்றி தெரிவித்த அதேவேளை, அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்துகொண்டார். அதனையடுத்து அவரது சேவைக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் நினைவுச் பரிசொன்றும் வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வின் நிறைவம்சமாக மேஜர் ஜெனரல் கித்சிறி லியனகே அவர்கள் படையினரின் வாழ்த்து மற்றும் அணிவகுப்பு மரியாதைக்கு மத்தியில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்திலிருந்து விடைப்பெற்றுச் சென்றார்.
இந்நிகழ்வில் 14 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் சமந்த விக்கிரமசேன, பிரிகேட் தளபதிகள், கட்டளை அலகுகளின் கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினரும் பங்கேற்றிருந்தனர்.