Header

Sri Lanka Army

Defender of the Nation

06th May 2022 20:10:07 Hours

வன்னி கட்டளை அதிகாரிகள் செயலமர்வில் பங்கேற்பு

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழுள்ள பட்டாலியன்கள் மற்றும் படையணிகளின் 40 கட்டளை அதிகாரிகள், அதிகாரிகளின் தொழில்முறை தரத்தை மேம்படுத்துவதற்காக இரண்டு நாள் கொண்ட செயலமர்வில் பங்குபற்றினர்.

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் சம்பிக்க ரணசிங்க அவர்களினால் முன்னெடுக்கப்பட்ட இந்த திட்டம் ஏப்ரல் 25-26 ஆகிய இரண்டு நாட்களுக்கு வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சியின் ஆரம்ப உரையை 56 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சமன் லியனகே நிகழ்த்தினார்.

நிர்வாகம், மற்றும் அதிகாரிகளின் தொழில் முன்னேற்றம், சிப்பாய்களின் மேலாண்மை, செயல்திறன் மதிப்பீடு, பயிற்சி வாய்ப்புகள், படைப்பிரிவின் கணக்குகளை நிர்வகிக்கும் தன்மைகள், ஊதியம் மற்றும் கொடுப்பனவுகள், தேசிய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை, சட்டப் பின்னணியில் கட்டளைப் பொறுப்புகள் என்பன விரிவுரையாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுடனான உரையாடல் அமர்வின் போது எடுத்துறைக்கப்பட்டது.

இதனைத் தொடர்து நிகழ்ச்சியின் உச்சக்கட்டமாக சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.