07th May 2022 20:45:44 Hours
சிங்கர் ஸ்ரீலங்கா பிரைவேட் லிமிடட் நிறுவனம் இராணுவத்தின் வேண்டுகோளுக்கு இணங்க முக்கம்பன் மற்றும் அக்கராயன்குளம் ஆகிய பகுதிகளில் இயங்கிவரும் 8 முன்பள்ளிகளின் சிரார்களுக்கு விளையாட்டுப் பொருட்களுடன் பரிசுப் பொதிகளை வழங்க அனுசரணையளித்தது. இவை 662 வது பிரிகேட் படையினரால் புதன்கிழமை (27) பகிர்தளிக்கப்பட்டன.
பிரிகேட் தலைமையகத்தின் சமூக நலன்புரி திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த பரிசுப் பொதிகளை விநியோகிப்பதற்கான ஏற்பாடுகளை 20 வது இலங்கை இலேசாயுத காலாட்படை மற்றும் 662 வது பிரிகேட்டின் 20 வது (தொ) விஜயபாகு காலாட்படை படையினர் மேற்கொண்டனர்.
66 வது படைபிரிவின் தளபதியினால் அனுசரணையாளரிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் பேரில், வறுமையான குடும்பங்களின் பிள்ளைகளுக்கு பகிர்ந்தளிக்க வழங்கப்பட்ட பரிசு பொதியில் விளையாட்டுபொருட்கள் மற்றும் கற்றலுக்கான பிற அத்தியாவசிய பொருட்கள் இருந்தன. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக 66 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ கலந்துகொண்டார்.
இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.