07th May 2022 20:43:43 Hours
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 51 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் மாணவச் சிப்பாய்களுகளுக்கு தலைமைத்துவப் பயிற்சி நிகழ்வு வியாழக்கிழமை (28) தல்செவன விடுமுறை விடுதியில் ஆரம்பமானது.
யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பாவின் வழிகாட்டுதலின்படி 51 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க அவர்களின் எண்ணக்கருவின் கீழ் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
யாழ் இந்துக் கல்லூரி, புனித பெட்ரிக்ஸ் கல்லூரி மற்றும் யாழ் வயாவிலான் மத்திய கல்லூரியினை சேர்ந்த 50 மாணவச் சிப்பாய்களுக்கு யாழ் இந்துக் கல்லூரியின் அதிபர் மற்றும் மாணவச் சிப்பாய் அதிகாரிகளுடன் இணைந்து இச் செயலமர்வின் போது பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இப் பயிற்சித் செயலரமர்வில் தலைமைத்துவ திறன்கள் மற்றும் ஆளுமை மேம்பாடு, தீர்மானமெடுத்தல், சாப்பாட்டு அறை பண்பாட்டு முறைமைகள் மற்றும் இதர விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.