Header

Sri Lanka Army

Defender of the Nation

07th May 2022 22:50:07 Hours

போர்வீரர்களின் மறக்க முடியாத தியாகங்களை' நினைவுகூறும் 'தேசிய போர்வீரர் மாதம்'

இலங்கை தேசத்தினால் என்றும் மறக்க முடியாத முப்படைகள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களம் ஆகியவற்றின் உயிரிழந்த மற்றும் காயமடைந்த ஆயிரக்கணக்கான போர்வீரர்களின் ஈடு இணையற்ற உன்னதமான தியாகம், அர்பணிப்புடன் கூடியதான வகிபாகம் ஆகியவற்றை நினைவுக்கூறும் வகையில் மே (06) முதல் நாடு முழுவதிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

ரணவிரு சேவா அதிகாரசபை தலைவர் மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர (ஓய்வு) தலைமையிலான குழுவினரால், 'தேசிய போர்வீரர்களின் நினைவேந்தல்' மாதத்திற்காக வடிவமைக்கப்பட்ட முதலாவது கொடி முப்படைகளின் சேனாதிபதி அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு ஜனாதிபதி மாளிகையில் இன்று (6) அணிவிக்கப்பட்டு நினைவுகூரல் மாதம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தேசிய போர் வீரர்கள் நினைவு தினத்தன்று ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள போர்வீரர்களின் நினைவுச்சின்னத்தில் மலர் அஞ்சலி செலுத்தபட்டு, ஆசி வேண்டிய சர்வமத பிரார்தனைகள் இடம்பெறுவதுடன் மறைந்தவர்களை நினைவுக்கூறுவதற்கான இறுதி இசை ஆகியவற்றுடன் சமயப் பிரமுகர்கள், கௌரவ அதிதிகள், பாதுகாப்புப் பதவி நிலை பிரதானி, முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், சிவில் பாதுகாப்புத் திணைக்கள பணிப்பாளர் நாயகம், காயமடைந்த போர்வீரர்கள், சிரேஷ்ட முப்படை அதிகாரிகள், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ஆகியோரின் பங்குபற்றலுடன் “வெற்றி தினமாக” கொண்டாடப்படும்.

ரணவிரு சேவைகள் அதிகாரசபையின் தலைவர் மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர (ஓய்வு) அவரகளினால் கௌரவ பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கித்சிறி ஏக்கநாயக்க (ஓய்வு) மற்றும் இன்னும் சிலர் முன்னிலையில் ஜனாதிபதிக்கு அடையாளபூர்வமான முதல் கொடி அணிவிக்கப்பட்டது.

(புகைப்பட அனுசரனை: ஜனாதிபதி ஊடகம்)