30th April 2022 19:03:05 Hours
தப்போவ மற்றும் நெலும்வெவ கிராம சேவகர் பிரிவு பிரதேசத்தில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் 40 குடும்பங்களுக்கு முதலாம் படைத் தலைமையகத்தின் 58 வது படைப்பிரிவினரால் உலர் உணவு பொதிகள் ஞாயிற்றுக்கிழமை (24) பகிர்ந்தளிக்கப்பட்டன.
58 வது படைப்பிரிவின் வேண்டுகோளுக்கு இணங்க, கைத்தொழில் பாதுகாப்பு உபகரண தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் திருமதி தீபிகா குணசேகரவின் அவர்களினால் வழங்கப்பட்ட நிதி உதவியை கொண்டு, 58 வது படைப் பிரிவு தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ரோஹித அலுவிஹாரே அவர்களின் முயற்சியில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த நன்கொடைக்கான ஒருங்கிணைப்புச் செயற்பாடுகள் இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் கேணல் வழங்கல் கேணல் நளிந்திர மகாவிதான அவர்களினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.