Header

Sri Lanka Army

Defender of the Nation

30th April 2022 04:01:47 Hours

யாழ். படையினருக்கு வழங்கல் தொடர்பில் கற்பிப்பு

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா அவர்களின் எண்ணக்கருவுக்கமைய 'யாழ். குடாநாட்டில் இராணுவ வள பயன்பாட்டில் முன்னுதாரண மாற்றம்' என்ற தொனிப்பொருளில் வள வழங்கல் தொடர்பான கருத்தரங்கு ஏப்ரல் 26 - 27 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் ஆரம்பமானது. இதன்போது, மாற்றமடையக்கூடிய சவால்கள், ஆக்கப்பூர்வமான மற்றும் புதுமையான உத்திகளுக்கு ஏற்றவாறு மாற்றுதல், வளங்களை மேம்படுத்தல் மற்றும் இருக்கும் நெருக்கடிகளை தீர்த்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் படையினருக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேற்படி செயலமர்வில், குடாநாட்டு கேணல் நிர்வாகம் மற்றும் வழங்கல் அதிகாரிகள், மேஜர் நிர்வாகம் மற்றும் வழங்கல் அதிகாரிகள், படையலகுகளின் 2 ஆம் கட்டளை அதிகாரிகள், குடாநாட்டு வழங்கல் பொறுப்பதிகாரிகள், படையணி வழங்கல் பொறுப்பதிகாரிகள் ஆகியோரும் பங்குபற்றினர்.

இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் ரஞ்சன் ஜயசேகர அவர்களினால் இந்த செயலமர்வில் வள வலையமைப்பை பயனுள்ள விதத்தில் பேணுவதற்கு அவசியமான செயற்பாடுகள் தொடர்பிலான விரிவுரையை நிகழ்த்தினார்.