Header

Sri Lanka Army

Defender of the Nation

30th April 2022 04:20:46 Hours

வெயங்கொட மத்திய ஆயுதக் களஞ்சியத்தின் பணிகள் தொடர்பில் இராணுவ பதவி நிலை பிரதானி மீளாய்வு

இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் வெயங்கொடவிலுள்ள இராணுவ மத்திய ஆயுதக் களஞ்சியத்தின் செயற்பாடுகள் தொடர்பில் மீளாய்வு செய்வதற்கான விஜமொன்றை புதன்கிழமை (27) மேற்கொண்டிருந்தார்.

இந்த விஜயத்தின் போது, தோட்டா நிரப்பும் பிரிவு மற்றும் வெடிமருந்து பகுதியில் நடைபெறும் உற்பத்திச் செயற்பாடுகள் மற்றும் அங்குள்ள கட்டிடங்கள் தொடர்பில் கண்காணித்த இராணுவ பதவி நிலை பிரதானியவர்களுக்கு குறித்த பகுதியின் செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இராணுவ போர்க்கருவிகள் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஹிரோஷ வணிகசேகர, போர்க் கருவிகள் பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் விதானாராச்சி, இலங்கை இராணுவ போர்க் கருவிகள் படையணியின் நிலையத் தளபதி பிரிகேடியர் அஜித் முனசிங்க, நவடிக்கை பணிப்பகத்தின் கேணல் பொதுப்பணி கேணல் பிரதீப் மாபலகம, கேணல் போர்க்கருவிகள் கேணல் ஆனந்த ஜயரத்னே ஆகியோரும் மேற்படி விஜயத்தில் பங்கேற்றனர்.