Header

Sri Lanka Army

Defender of the Nation

30th April 2022 03:56:45 Hours

‘ஆரோக்கியமான இராணுவம் - ஆரோக்கியமான தேசம்’ என்ற தலைப்பில் ராகமை ஆயுதக் களஞ்சிய படையினருக்கு செயலமர்வு

கொழுப்பு இராணுவ வைத்தியசாலையின் ஏற்பாட்டில் ராகமையிலுள்ள இராணுவ ஆயுதக் களஞ்சிய முகாம் வளாகத்தில் பணியாற்றும் 100 படையினர்களுக்கு புதன்கிழமை (27) 'ஆரோக்கியமான இராணுவம் - ஆரோக்கியமான தேசம்' என்ற தொனிப்பொருளில் தொற்றா நோய்கள் மற்றும் தொற்று நோய் பாதிப்புக்களுக்கு இலக்காகாத வகையில் ஆரோக்கியமான வாழ்க்கை நடத்தும் முறை தொடர்பில் கற்பிக்கப்பட்டது.

இதன்போது, இத்திட்டத்தின் ஸ்தாபகரும் கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் ஆலோசகருமான வைத்தியர் பிரிகேடியர் மொரீன் விஜேவர்தன உணவுப் பழக்க வழக்கங்கள், உடற் பயிற்சிகள், நோய்கள், தனிப்பட்ட சுகாதாரப் பழக்க வழக்கங்கள், குடும்ப ஆரோக்கியம் என்பவை தொடர்பில் விரிவுரை நிகழ்த்தினார். மேலும், கேணல் (வைத்தியர்) லக்மினி ரணசிகே மற்றும் கெப்டன் (வைத்தியர்) ஏ.சி.கே. உடுகம, உணவியல் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் ஆகியோரால் உடற் பயிற்சிகள் மற்றும் உணவு கட்டுப்பாடு மற்றும் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்த விளக்கமளிக்கப்பட்டது.

'ஆரோக்கியமான இராணுவம் - ஆரோக்கியமான தேசம்' ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் பதவி நிலை அதிகாரி மேஜர் ஜே.எம்.சி.பி.ஆர் பண்டார மற்றும் சிப்பாய்கள் சிலரினால் நிகழ்ச்சி ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.