Header

Sri Lanka Army

Defender of the Nation

26th April 2022 19:38:06 Hours

யாழ். படையினரின் முறய்சிகளுக்கு அமெரிக்க தூதுவர் பாராட்டு

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி ஜே சுங், ஞாயிற்றுக்கிழமை (24) மேற்கொண்ட யாழ் குடாநாட்டுக்கான விஜயத்தின் போது யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா அவர்களை யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். இதன்போது அமெரிக்கத் தூதுவர் மற்றும் அவரது தூதுக்குழுவினருக்குயாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி அவர்களினால் வரவேற்பளிக்கப்பட்டது.

அதனையடுத்து, மேஜர் ஜெனரல் செனரத் யாப்பா அவர்களினால் யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சேவையாற்றும் படையினரால் மேற்கொள்ளப்படும் பல்நோக்கு மற்றும் சமூக நலன்புரி திட்டங்கள் குறித்து தூதுக்குழுவினருக்கு விளக்கமளிக்கப்பட்டது. அதேநேரம் பாதுகாப்புப் படைகளுக்கும் மக்களுக்கும் இடையே நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில் படையினரால் மேற்கொள்ளப்படும் முறயற்சிகள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

இதன் போது மக்களின் நல்வாழ்வுக்கான படையினரின் அர்ப்பணிப்பு மற்றும் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு இடையில் நல் உறவினை மேம்படுத்துவதற்கான செயற்பாடுகள் என்பன குறித்தும் தூதுக்குழுவினர் விளக்கங்களை பெற்றுக்கொண்டனர்.

அதனையடுத்து யாழ் குடாநாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்கு பாதுகாப்புப் படையினரால் வழங்கப்படும் பங்களிப்புக்கு அவர் பாராட்டுக்களை தெரிவித்தார். மேலும், அவர் புறப்படுவதற்கு முன்பு யாழ் மக்களின் அமைதி, ஜனநாயகம் மற்றும் நீதிக்காக உழைக்கும் பாதுகாப்புப் படையினரின் முழுமையான அர்ப்பணிப்பைப் பாராட்டும் வகையில் விருந்தினர் பதிவேட்டில் எண்ணங்களை பதிவிட்டார்.

பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மற்றும் அமெரிக்கத் தூதுவர் சுமூகமான உரையாடல்களின் முடிவில் நினைவுச் சின்னங்களை பரிமாறிக்கொண்டனர். மேலும் யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் உள்ள பிரிகேடியர் ஜெனரல் பொதுப்பணி அதிகாரியும் இந்த சந்திப்பில் இணைந்திருந்தனர்.