Header

Sri Lanka Army

Defender of the Nation

25th April 2022 19:36:24 Hours

திவுலபிட்டியவில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட வார்டு மேற்குப் படையினரால் புனரமைப்பு

மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கித்சிறி லியனகே அவர்களின் பணிப்புரைக்கமைய 6 வது இலங்கை பீரங்கி படையணியினர் மற்றும் 141 வது பிரிகேடின் 1 வது பொறியாளர் சேவைப் படைணியினர் இணைந்து புனரமைப்புச் செய்த திவுலபிட்டியவில் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட மாவட்ட கொவிட் - 19 வார்டு புதன்கிழமை (20) வைத்தியசாலை அதிகாரிகளிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

அப்பகுதி மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு வரையறுக்கப்பட்ட MAS Active Nirmana நிறுவனத்தினால் வழங்கப்பட்ட நிதி உதவியை கொண்டு வார்டின் மறுசீரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்நிகழ்வில் வரையறுக்கப்பட்ட MAS Active Nirmana நிறுவனத்தின் மனித வளங்கள் மற்றும் நிலையான வர்த்தகப் பணிப்பாளர் திருமதி எஸ். லொகுகே அவர்களுடன் இணைந்து 141 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் பிரதீப் கமகே அவர்கள் இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இதன்போது வார்டின் நினைவுப் படிகம் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டதை தொடர்ந்து மங்கள விளக்கேற்றும் நிகழ்வு நடைபெற்றதோடு, உத்தியோகபூர்வமான கையளிக்கப்பட்ட மறுசீரமைப்புச் செய்யப்பட்ட வார்டு வைத்தியசாலையின் பணி்ப்பாளரால் பொறுப்பேற்கப்பட்டது. இதன் நினைவம்சமாக பிரதம அதிதியவர்களால் வைத்தியசாலை வளாகத்தில் மரக்கன்று ஒன்றும் நாட்டி வைக்கப்பட்டது.

141 வது பிரிகேடின் பதவி நிலை அதிகாரிகள், 6 வது இலங்கை பீரங்கி படையணி மற்றும் 1 வது பொறியாளர் சேவை படையணியின் கட்டளை அதிகாரிகள், நன்கொடை அளித்த நிறுவனத்தின் பிரதிநிதிகள் மற்றும் வைத்தியசாலையின் நிர்வாகிகள் உட்பட பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.