Header

Sri Lanka Army

Defender of the Nation

25th April 2022 19:40:12 Hours

இராணுவத்தின் ஒருங்கிணைப்பில் மட்டு. பொது மக்களுக்கு நிவாரண பொதிகள் விநியோகம்

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 23 வது படைப்பிரிவின் கீழுள்ள 233 வது பிரிகேடின் படையினரால் குருணாகல் பகுதியை சேர்ந்த நன்கொடையாளர் ஒருவரின் உதவியை கொண்டு சனிக்கிழமை (16) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றின் போது, 233 வது பிரிகேட் தலைமையகத்திற்கு அழைப்பிக்கப்பட்டிருந்த மட்டக்களப்பில் வசிக்கும் வறிய குடும்பங்களை சேர்ந்தோருக்கு ரூபாய் 350,000/= பெறுமதியான 100 உலர் நிவாரண பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

233 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் வசந்த ஹேவகே அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க வரையறுக்கப்பட்ட குருணாகல் முருகன் வியாபர நிறுவன உரிமையாளர் திரு சுரேஷ் அவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற நிதி உதவியை கொண்டு இந்நிகழ்வு நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் லால் சந்திரசிறி அவர்களுடன் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும், பயனாளிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

அதேநேரம் குருணாகல் பகுதியை சேர்ந்த மேற்படி நன்கொடையாளர் வழங்கிய உதவியை கொண்டு, 233 வது பிரிகேடினரின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கதிரவெளி விக்கினேஷ்வரம் கனிஷ்ட பாடசாலை, பணிச்சங்கேணி திருமகள் வித்தியாலயம், கல்லடி அருந்ததி வித்தியாலயம், வாகறை வமிர்தவாவன் மகா வித்தியாலயம் ஆகியவற்றின்6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை பகிர்ந்தளிக்கும் நிகழ்வொன்றும் 17 ஏப்ரல் 2022 அன்று நடைபெற்றது.

இந்நிகழ்வானது, 233 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் வசந்த ஹேவகே அவர்களின் கண்காணிப்பின் கீழ் நடைபெற்றது.

மேலும் அதிபர்கள், ஆசிரியர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் மாணவர்களும் பெற்றோர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.