20th April 2022 19:48:22 Hours
மத்திய பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சமந்த சில்வா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பத்தரமுல்லை திரு ருவின் சில்வாவின் அனுசரணையில் மகுல் எல்ல வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 115 மாணவர்களுக்கு பெருமளவான பாடசாலை உபகரணங்கள் மற்றும் எழுதுபொருட்கள் வழங்கி வைத்தார்.
இவ் நன்கொடை வழங்கும் நிகழ்வு பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றதுடன் இந் நிகழ்வில் முதலில் பாடசாலையில் மிகவும் வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டதினை தொடர்ந்து ஏனையவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதி. சிரேஷ்ட அதிகாரிகள், பாடசாலை அதிபர் ,ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்திய பாதுகாப்பு படை தலைமையக சிவில் விவகார அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.