Header

Sri Lanka Army

Defender of the Nation

19th April 2022 17:48:46 Hours

நன்கொடையாளர்களின் உதவியுடன் படையினரால் கம்புருபிட்டிய பகுதியில் உலர் உணவு நிவாரண பொதிகள் விநியோகம்

மேற்கு பாதுகாப்புப் படை தலைமையகத்தின் 61 வது படைப்பிரிவின் கீழ் உள்ள 613 வது பிரிகேடினரால் கம்புருப்பிட்டி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வசிக்கும் வறிய குடும்பங்களுக்கு 40 உலர் உணவுப் பொதிகள் செவ்வாய்க்கிழமை (12) பகிர்ந்தளிக்கப்பட்டன.

இந் நிகழ்விற்கு “மிதுதம் உதவும் கரம்” அமைப்புடன் இணைந்து கலாநிதி பாக்ய வீரவர்தன அவர்கள் இணைந்து வழங்கிய நிதி உதவியை கொண்டு, 613 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் உபுல் கொடித்துவக்கு மற்றும் இலங்கை பீரங்கி படையின் லெப்டினன் கேணல் விராஜ் அபேசிங்க ஆகியோரால் இந்நிகழ்வு ஒருங்கிணைப்பு செய்யப்பட்டது.

கம்புருபிட்டியவில் உள்ள 613 வது பிரிகேட் தலைமையகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.