Header

Sri Lanka Army

Defender of the Nation

19th April 2022 17:58:49 Hours

இராணுவத்துடன் இணைந்து மியூசியஸ் கல்லூரியின் பழைய மாணவிகளால் மற்றுமொரு வீடு நிர்மாணம்

இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடொன்று தெவஹூவ, ஹினுக்கல பிரதேசத்தில் நிரந்தர தங்குமிடமின்றி தனது குழந்தைகளுடன் வசித்து வந்த மாற்றுத்திறனாளி ஒருவரின் குடும்பத்தாருக்கு திங்கட்கிழமை (11) வழங்கி வைக்கப்பட்டது.

கொழும்பு மியூசியஸ் கல்லூரியின் 1980 ஆண்டு மாணவியர் குழுவினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட 3 இலட்சம் ரூபாய் நிதி உதவியை கொண்டு, மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 11 வது படைப்பிரிவின் 111 வது பிரிகேடின் 10 வது கஜபா படையணி, 2 வது இலங்கை சிங்கப் படையணி, முதலாவது இலங்கை ரைபில் படையணி மற்றும் 17 வது பொறியியல் சேவை படையணியினரால் நான்கு மாதங்களுக்குள் வீட்டின் நிர்மாண பணிகள் பூர்த்தி செய்யப்பட்டன.

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மற்றும் 11 வது படைப்பிரிவு தளபதியவர்களின் அறிவுறுத்தலுக்கமைய 111 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ரோஹித ரத்நாயக்க அவர்களின் கண்காணிப்பின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட மேற்படி வீடானது, மாற்றுத் திறனாளி பிள்ளைகளுடன் அக்கர-20, ஹினுக்கல, தெவஹூவ என்னும் முகவரியில் வசிக்கும் விதவை பெண்ணான திருமதி டபிள்யூ.எம்.மதுஷா பிரசாதி தர்மபால என்பவருக்கு வழங்கப்பட்டது.

மேற்படி நிகழ்வின் போது பயனாளி குடும்பத்தினருக்கு இராணுவ மற்றும் சிவில் அதிகாரிகளினால் உலர் உணவு பொதியொன்றும் வழங்கி வைக்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் ஹினுக்கல, தேவஹூவ கிராம சேவகர் உட்பட அழைப்பு விடுக்கப்பட்டவர்களும் பயனாளி குடும்பத்தின் உறவினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.