Header

Sri Lanka Army

Defender of the Nation

14th April 2022 09:08:07 Hours

தளபதி மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி சிவில் பணியாளர்களுக்கு புத்தாண்டு பரிசுகளை வழங்கல்

இராணுவ சேவை வனிதையர் பிரிவு சிவில் ஊழியர்களின் பங்களிப்பிற்கு இராணுவம் கொண்டுள்ள பாராட்டு மற்றும் அங்கீகாரத்தை அடையாளப்படுத்தும் வகையில், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத் தளபதியின் செயலகத்தில் பணிபுரியும் சிவில் ஊழியர்களை தளபதியின் அலுவலகத்திற்கு அழைத்து பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு புத்தாண்டு பரிசுப் பொதிகளை வழங்கினார்.

ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் பரிசுப் பொதிகளை வழங்கும் போது அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலன்கள் மற்றும் அவர்கள் தொடர்பான ஏனைய விடயங்களை கேட்டறிந்து புத்தாண்டு உணர்வுகளை இந்த சந்தர்ப்பத்தில் பகிர்ந்து கொண்டார். அதேவேளை, அந்த பரிசுப் பொதிகளைப் பெற்றவர்கள், இராணுவத் தளபதியின் செயலகத்தில் முதல் தடவையாக இராணுவத் தளபதியுடன் உரையாட முடிந்தமைக்கு தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.

இதற்கிடையில், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவர் திருமதி சுஜீவா நெல்சன் தலைமையில் இராணுவத் தலைமையக வளாகத்தில் பணிபுரியும் சிவில் ஊழியர்கள் மற்றும் அவர்களின் நலனுக்காக தனது நலன்புரிப் பங்களிப்பை வழங்குவதற்காக இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற விழாவில் பரிசுப் பொருட்கள், உலர் உணவுப் பொதிகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன.

இராணுவ சேவை வனிதையர் பிரிவு இராணுவத் தலைமையகத்தில் உள்ள சிவில் ஊழியர்கள், இராணுவ சேவை வனிதையர் பிரிவு அலுவலக வளாகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் அர்ப்பணிப்புச் சேவையைப் பாராட்டி, அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உலர் உணவுப் பொதிகள் அடங்கிய தனித்தனி புத்தாண்டு பரிசுப் பொருட்களை வழங்கியது. . பிரதம விருந்தினராக திருமதி நெல்சன் அவர்கள் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் மேலும் ஒரு திட்டமாக பயனாளிகளுக்கு ஊக்கத்தொகைகளை வழங்கினார்.

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் அழைப்பின் பேரில் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மேலும் ஹோமாகம பிரதேசத்தில் உள்ள ஒரு நன்கொடையாளரான திருமதி சந்திராணி லியனகே சுமார் 9 மில்லியன் ரூபாய் மதிப்பிலான இரண்டு மாடி வீட்டையும் அதன் வளாகத்தையும் இராணுவ சேவை வனிதையர் பிரிவிக்கு நலன்புரி திட்டங்களில் பயன்படுத்துவதற்காக அன்பளிப்பாக வழங்கியதன் காரணமாக இந்த நிகழ்வு முக்கியத்துவம் பெற்றது. காயமடைந்த போர்வீரர்கள் மற்றும் உயிர்நீத்த போர்வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆதரவாக தற்போதைய பணிகளை மேலும் தொடரும் முகமாக அது அன்பளிப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

நன்கொடையாளர், ஹோமாகம, ரொமியல் மாவத்தையில் அமைந்துள்ள தனது சொத்து தொடர்பான ஆவணங்களை, ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன் ஆகியோரிடம் கையளித்தார். திருமதி நெல்சன் திருமதி லியனகே அவர்களின் சிந்தனைக்கு நன்றி தெரிவித்ததுடன், போர்வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் நலனை மேம்படுத்தும் வகையில், சொத்து நிச்சயமாக சிறந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் என்று உறுதியளித்தார்.

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் காரியாலயத்தின் பிரிகேடியர் ஒருங்கிணைப்பாளர் பிரிகேடியர் துஷார பாலசூரிய, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் அன்றைய நிகழ்வில் கலந்துகொண்டனர்.