Header

Sri Lanka Army

Defender of the Nation

12th April 2022 20:35:57 Hours

பிரதான மூன்று இனத்தினரை உள்ளடக்கிய 412 இளைஞர்கள் 'சிப்பாய்கள்' பாடநெறியினை முடித்து இராணுவத்தில் இணைந்தனர்

யாழ். வாசவிலான் பகுதியில் உள்ள பட்டாலியன் பயிற்சிப் பாடசாலையில் பயிற்சிகளை நிறைவு செய்யத 412 பயிலுனர்கள் நான்கு மாத அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்து சனிக்கிழமை (9) வெளியேறிச்சென்றனர்.

தமிழ் மற்றும் சிங்கள மொழி பேசும் இளைஞர்களை உள்ளடக்கிய இந்த ஆட்சேர்ப்பு பயிற்சி நெறியானது, இராணுவத்தின் எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் வகையில் உடல், மன மற்றும் ஒழுக்க ரீதியில் அவர்களை தொழில்முறை வீரர்களாக மாற்றும் வகையில் அமைந்திருந்தது.

இராணுவத் தளபதியின் 'இராணுவ வழி முன்னோக்கு வியூகம் - 2020 - 2025' திட்டத்திற்கு அமைவாக யாழ். வாசவிலானில் உள்ள பட்டாலியன் பயிற்சிப் பாடசாலையில் நடாத்தப்பட்ட இரண்டாவது ஆட்சேர்ப்பு பாடநெறி இதுவாகும். இதில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் நான்கு மாத கால பயிற்சியின் பின்னர் நாட்டிற்கு ஒழுக்கமான இராணுவ வீரர்களாக சேவையாற்றுவதற்காக சித்தியடைந்துள்ளனர்.

நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொண்ட 51 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க அவர்கள் தனது உரையில், சிப்பாயின் கடமைகள் மற்றும் ஒழுக்கத்தைப் பேணுதல், கடமைகளைச் சரியாகச் செய்தல் போன்றவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

சிப்பாய்கள் அரசு மற்றும் மனித பாதுகாப்பின் மூலக்கல்லாகும், ஆனால் அவர்களின் சட்டப்பூர்வத்தன்மை மற்றும் செயல்திறன் ஆகியவை ஜனநாயக, சிவில் கட்டுப்பாடு, சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகளுக்கான மரியாதை ஆகியவற்றின் கட்டமைப்பிற்குள் தங்கள் பணியை பொறுப்புடன் நிறைவேற்றுவதைப் பொறுத்தது என்று தனது உரையின் போது கூறினார்.

பட்டாலியன் பயிற்சிப் பாடசாலையின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் லெப்டினன் கேணல் ஏ.எஸ் கந்தம்பி அவர்கள், பாடசாலையின் தளபதியின் ஒத்துழைப்புடன் பயிற்சித் தொகுதிகளை நெருக்கமாகக் கண்காணித்தார்.

சிறந்த துப்பாக்கி சுடும் வீரராக சிப்பாய் ஜி.ஏ.டி சாகர, பயிற்சியின் சிறந்த மாணவராக சிப்பாய் பி.எஸ்.பி ஜெயவர்தன, சிறந்த உடல் பயிற்சி வீரராக சிப்பாய் ஏ.பி. ஜயசேன ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டதுடன் அவர்களுக்கான விருதுகளும் வழங்கிவைக்கப்பட்டன. அவர்கள் அனைவரும் அன்றைய பிரதம விருந்தினரிடமிருந்து அந்த விருதுகளை பெற்றுக்கொண்டனர்.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் புதிதாக பணியமர்த்தப்பட்ட இராணுவ வீரர்களின் உறவினர்கள் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி விழாவில் பங்கேற்றனர்.