Header

Sri Lanka Army

Defender of the Nation

12th April 2022 08:22:24 Hours

ஒட்டுசுட்டான் குள அளவை பணியின் போது நீரில் மூழ்கிய இருவரை இராணுவ வீரர்கள் காப்பாற்றினர்

செவ்வாய் (05) மாலை முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஊரம்பக்குள அளவை பணியில் ஈடுபட்டிருந்த இருவர், படகு கவிழ்ந்ததில் குளத்தில் மூழ்கிய நிலையில் முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 64 வது படைப் பிரிவின் கீழுள்ள 642 வது பிரிகேட் படையினர் மீட்டுள்ளனர்.

புவியியல் ஆய்வு மற்றும் வரையரையறுக்கப்பட்ட தனியார் தொழில்நுட்ப சுரங்கப் பணியக நிறுவனத்தின் 25 முதல் 30 வயதுக்குட்பட்ட நான்கு பேர் கொண்ட ஆய்வுக் குழுவினர் குளத்தினை ஆய்வு செய்து கொண்டிருந்தவேளை அவர்களின் படகு எதிர்பாராதவிதமாக குளத்தில் நடுவில் கவிழ்ந்தனால் அவர்கள் தண்ணீரில் விழுந்தனர். இருப்பினும் அவர்களில் ஒருவர் கவிழ்ந்த படகினை பிடித்துக் கொண்டார், ஆனால் மற்ற மூவரும் ஆழமான நீரில் நீந்த முடியாமல் தத்தளித்தனர்.

மாலை 4.15 மணியளவில் நீரில் மூழ்கியவர்களின் திடீர் அலறல் சத்தம் கேட்டு அருகிலுள்ள பகுதியில் கடமையில் இருந்த 642 வது பிரிகேட்டில் கடமையாற்றும் மேஜர் எச்.பி.எஸ்.பி பீரிஸ் மற்றும் லான்ஸ் கோப்ரல் டபிள்யூ.எஸ் வெலபடகே ஆகியோர் தங்களின் உயிரைப் பற்றி சிந்திக்காமல் உடனடியாக நீரில் குதித்து நீரில் மூழ்கிய இருவரையும் காப்பாற்றினர்.

எவ்வாறாயினும், ஒருவர் தண்ணீருக்கு அடியில் சென்று, படகுடன் காணாமல் போனார். மீட்கப்பட்ட இருவருக்கும் இராணுவ வீரர்கள் முதலுதவி அளித்து அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஒட்டுசுட்டானில் உள்ள பொலிஸாருடன், பொதுமக்கள் மற்றும் 642 வது பிரிகேட் படையினர் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு, மாலை 6.30 மணியளவில் காணாமல் போனவரின் சடலத்தையும் படகுகளையும் கண்டெடுத்துள்ளனர்.