Header

Sri Lanka Army

Defender of the Nation

06th April 2022 22:42:04 Hours

புனித இருதய கன்னியர் மடம் மாணவர்களுக்கு படையினரால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

பாடசாலை மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில், முல்லைத்தீவில் உள்ள புனித இருதய கன்னியர் மடத்திலுள்ள 47 மாணவர்களுக்கு 28 மார்ச் 2022 அன்று, பிரபல போதகரும் சமூக ஆர்வலருமான வண. அருட் தந்தை சார்லஸ் தோமஸ் அவர்களின் அனுசரணையின் மூலம் பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மடத்தின் தலைமை பொறுப்பாளரினால் 59 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.டி.சூரியபண்டார அவர்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்ந்து அவரின் நடவடிக்கைகளுக்கு அமைவாக மாணவர்களின் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு அவசியமான 700,000/= ரூபாயினை நன்கொடையாளர் வழங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் 592 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சமிந்த ஆராச்சிகே , சில சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பிரதேச பொதுமக்களும் கலந்துகொண்டனர்.