Header

Sri Lanka Army

Defender of the Nation

06th April 2022 22:47:15 Hours

இலங்கை இராணுவ சேவை படையணியின் படைத் தளபதிபதியாக மேஜர் ஜெனரல் ஹிரோஷ வணிகசேகர பதவியேற்பு

இராணுவ தலைமையக போர்கருவிகள் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஹிரோஷ வணிகசேகர இலங்கை இராணுவ சேவைப் படையணியின் 24 வது படைத் தளபதியாக திங்கட்கிழமை (04) பனாகொடையிலுள்ள படையணி தலைமைகத்தில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

படையணி வளாகத்திற்கு வருகை தந்த வேளையில் இராணுவ சேவை படையணியின் புதிய படைத் தளபதியாக நியனம் பெற்ற அதிகாரிக்கு படையணியின் சிப்பாள்களால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையுடன் வரவேற்பளிக்கப்பட்டது.

அதனையடுத்து மத அனுட்டானங்களுக்கு மத்தியில் மேஜர் ஜெனரல் ஹிரோஷ வணிசேகர அவர்கள் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார். பின்னர், வழங்கப்பட்ட சிறப்பு பாதுகாவலர் அறிக்கையிடல் மற்றும் அணிவகுப்பு மரியாதை என்பவற்றை தொடர்ந்து தளபதியவர்களால் தலைமையக வளாகத்தில் மரகன்று ஒன்றும் நாட்டி வைக்கப்பட்டது.

அதனையடுத்து அனைத்து நிலைகளுக்கமான தேநீர் விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட புதிதாக நியமனம் பெற்ற படைத் தளபதி சிப்பாய்களுக்கான உரையொன்றினை நிகழ்த்தினார். மேஜர் ஜெனரல் மகேஷ் அபேரத்ன அவர்களின் ஓய்வையடுத்து புதிய படைத் தளபதியவர்கள் நியமனத்தை பொறுப்பேற்றுகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.