06th April 2022 22:52:22 Hours
அக்கரைப்பற்று மாவட்ட கலாசார உத்தியோகத்தர் திரு ஏ.எல்.தௌபீக் அவர்களின் நிதி உதவியை கொண்டு கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 24 வது படைப்பிரிவின் 241 வது பிரிகேடின் 11 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் ஒருங்கினைப்பில் அம்பாறை எரகம நிவ்குண சத்தாதிஸ்ஸ கனிஷ்ட பாடசாலையின் 45 மாணவர்களுக்கு பாடசாலைப் பைகளை வழங்கும் நிகழ்வு மார்ச் 25 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
241 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சந்திர அபயகோன் பிரதம அதிதியாகக் கலந்துக்கொண்டு நிதி உதவி வழங்கியோரின் பங்குபற்றலோடு பாடசாலைப் பைகளை மாணவர்களுக்கு வழங்கி வைத்தார்.
இந் நிகழ்வி்ல் 11 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் டபிள்யூ.ஜி.என்.டி தம்மிக்க வீரசிங்க, அக்கரைப்பற்று ஹிஜ்ரா கல்லூரியின் அதிபர் திரு எம்.எச் தாசிம் மற்றும் 11 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் சிப்பாய்களும் கலந்து கொண்டனர்.