06th April 2022 07:00:30 Hours
65 வது படைப்பிரிவின் ஏற்பாட்டின் கீ்ழ் சுய தொழில் முயற்சியை ஊக்குவிக்கும் விதமாக மன தைரியம் மிக்க வறிய பெண்னொருவரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ளும் இயலுமை கிட்டும் வகையில் அவரஞக்கு தையல் இயந்திரமொன்று நன்கொடையாக வழங்கப்பட்டது.
வட்டவல தேயிலை கம்பனி பிரைவேட் லிமிடட் நிறுவனம் வழங்கிய தையல் இயந்திரம் 65 ஆவது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் அனில் சமரசிறி அவர்களின் அறிவுரைக்கமைய வெள்ளிக்கிழமை (1) அம்பால்புரம் 6ஆம் மைல்கல் பகுதியில் வசிக்கும் திருமதி விதுஷன் நிலலோகினி அவர்களின் வீட்டு வாசலுக்கு சென்று வழங்கி வைக்கப்பட்டது.
652 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சஞ்சீவ வணசேகர அவர்களுக்கு பயனாளியின் தேவை தொடர்பில் தெரியப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இந்நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.