06th April 2022 07:48:30 Hours
கொழும்பு ரோயல் கல்லூரி பழைய மாணவர்கள் , ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிப்போரின் நிதி உதவியை கொண்டு வவுனியா கனகராயன்குளம் மகா வித்தியாலயத்தின் வறிய மாணவர்ளுக்கு புதன்கிழமை (30) கற்றல் உபகரணங்கள் இலவசமாக பகிர்ந்தளிக்கப்பட்டன.
தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு பிரசாத் லொக்குபாலசூரிய , திருமதி சமந்தி விஜேவர்தன, திருமதி சந்திரிகா இல்லேருமராச்சி ஆகியோருடன் , 561 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஜீபீபீ குலதிலக்க, 563 வது பிரிகேட் தளபதி கேணல் ஏஜீஎஸ்எம் பெரேரா, 56 வது படைப்பிரிவின் சிவில் விவகார அதிகாரி லெப்டினன் கேணல் எம்ஆர் ஜயசிங்க, 16 வது இலங்கை சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி, 17 வது (தொ) விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் சிப்பாய்களும் நிகழ்வில் கலந்துகொண்டு மாணவர்களுக்கான கற்றல் உதவிகளை வழங்கி வைத்தனர்.