Header

Sri Lanka Army

Defender of the Nation

30th March 2022 08:30:33 Hours

121 வது பிரிகேட் படையினரால் காட்டுத்தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது

மொனராகலை, ஹொரொம்புவ, சுடுவத்துவார வனப் பகுதிக்குள் பரவிய காட்டுத்தீயானது 121 வது பிரிகேடின் 26 இற்கும் மேற்பட்ட படையினரால் வெள்ளிக்கிழமை (25) சில மணித்தியாலங்களில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

சரியான நேரத்தில் படையினரால் வழங்கப்பட்ட ஒத்துழைப்பின் காரணமாக தீ பரவலானது முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

12 வது பிரிவின் தளபதியின் வழிகாட்டுதலின் கீ்ழ் 121 வது பிரிகேடின் பிரிகேட் தளபதி மேற்பார்வையின் கீழ் இந்த நடவடிகைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.