Header

Sri Lanka Army

Defender of the Nation

26th March 2022 18:58:08 Hours

இராணுவத்தினால் உற்பத்தி செய்யப்பட்ட 23,780 கிலோ சேதன பசளை லக்பொஹொர நிறுவனத்திற்கு வழங்கள்

மின்னேரியாவில் உள்ள இலங்கை 7 வது பீரங்கி இலேசாயுத படையணியின் வளாகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 23,780 கிலோகிராம் சேதன பசளை வெள்ளிக்கிழமை (25) வரையறுக்கப்பட்ட லக்பொஹொர நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் தலைமையிலான பசுமை விவசாய செயற்பாட்டு மையம் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு இணங்க, வரும் சிறுபோகத்திற்கு பாவனை செய்யக்கூடியவாறு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து இராணுவ முகாம்களும் சேதன பசளை உற்பத்தி செய்வதில் ஆர்வம் காட்டின.

இலங்கை 7 வது பீரங்கி இலேசாயுத படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் எச்.சி.எச்.ஹரிச்சந்திர அவர்களினால் தயாரிக்கப்பட்ட கையிருப்பில் உள்ள 23,780 தொகுதிகள் கொண்ட சேதன பசளை, லக்பொசேர நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கு கையளிக்கப்பட்டது.