30th March 2022 10:30:33 Hours
ஹிங்குராங்கொட பிரதேச செயலகப் பிரிவில் இராணுவத்தின் ஒருங்கிணைப்பின் மூலம் மிகவும் தொலைதூர மற்றும் வசதி குறைந்த பாடசாலைகளில் ஒன்றான ஹிங்குரக ஆரம்பப் பாடசாலையில் கல்வி கற்கும் 109 மாணவர்களுக்கு சமூக சேவை செயற்பாட்டாளரான திருமதி லக்மினி பொன்சேகா அவர்களின் அனுசரணையின் மூலம் பாடசாலை உபகரணங்கள் வெள்ளிக்கிழமை (25) வழங்கப்பட்டன.
கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமயைக தளபதி மேஜர் ஜெனரல் லால் சந்திரசிறி அவர்களின் ஆசீர்வாதத்துடன் ஹிங்குரக ஆரம்பப் பாடசாலை வளாகத்தில் இலங்கை 7 வது இலேசாயுத பீரங்கி படையணியின் படையினர் ஏற்பாட்டில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.மிகவும் ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்த, தரம் 1 - 5 இல் கல்வி கற்கும் 109 மாணவர்கள் பொருளாதாரக் கஷ்டங்களுக்கு உள்ளாகி, பாடசாலைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு வசதியின்றி இருப்பதை கருத்தில் கொண்டு இத்திட்டமானது முன்னெடுக்கப்பட்டதுடன், அதே நன்கொடையாளரான திருமதி லக்மினி பொன்சேகா தனது அனுசரணையின் மூலம் அனைத்து மாணவர்களுக்கும் ஆடம்பரமான மதிய விருந்து அளித்தார்.
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமயைக தளபதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி 23 வது படைப்பிரிவின் கேணல் பொது பதவி நிலை அதிகாரி கேணல் குமார பெரேரா அவர்கள் இந்த விநியோக நிகழ்வில் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் 23 பிரிவின் பொதுப் பணி நிலை அதிகாரி 1 லெப்டினன் கேணல் எல்.ஆர்.என்.பி.யு.ரத்நாயக்க, நன்கொடையாளரான திருமதி லக்மினி பொன்சேகா, அதிபர், நன்கொடையாளரின் பிரதிநிதிகள், வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள், மின்னேரிய 7வது இலேசாயுத பீரங்கி படையணியின் 2வது கட்டளைத் அதிகாரி மேஜர் டபிள்யூ.எம்.கே.டபிள்யூ.விஜேரத்ன, இலங்கை பீரங்கி படையணி தலைமையகத்தின் மேஜர் டி.பி.எஸ்.எஸ் கருணாரத்ன. உட்பட பலர் கலந்துகொண்டனர்.