29th March 2022 11:47:49 Hours
போயகனயில் அமைந்துள்ள விஜயபாகு காலாட்படை படையணி தலைமையகம் தனது 32வது ஆண்டு நிறைவை செவ்வாய்க்கிழமை (22) கொண்டாடியதுடன், விஜயபாகு காலாட்படை படையணியின் தளபதியும் இராணுவத் தலைமையகத்தில் பொது பணி பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே அவர்களின் பங்குபற்றுதலுடன் நிகழ்வுகள் இடம்பெற்றன.
மல்லவப்பிட்டிய முதியோர் இல்ல முதியோர்கள் மற்றும் மலியதேவ சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் உள்ளவர்களுக்கு இலவச உலர் உணவுகள் விநியோகம், மார்ச் 18 - 19 ஆம் திகதிகளில் மகா சங்கத்தினருக்கு பீரித் பராயணம் ஓதுதல் மற்றும் அன்னதானம் வழங்குதல், நடமாடும் ஆயுர்வேத மருத்துவ முகாம் மற்றும் படையணியின் ஆண்டு நிறைவு தின நிகழ்வுகள் (22) இடம்பெற்றன.
ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு பாதுகாவலர் அறிக்கை அணிவகுப்பு, உயிர் நீத்த போர்வீரர்களின் நினைவேந்தல் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 1 வது விஜயபாகு மன்னரின் சிலையை திறந்து வைத்தல், சிப்பாய்களுக்கான உரை, அனைத்து தரப்பு சிப்பாய்களுடனான மதிய நேர உணவு மற்றும் பல கலந்துரையாடல்கள் உள்ளிட்ட நிகழ்வுகள் இடம்பெற்றன.