29th March 2022 11:51:53 Hours
இலங்கை சமிக்ஞைப் படையணி தலைமையக மையத்தில் திங்கட்கிழமை (21) ஆரம்பமான படையணிகளுக்கடையிலான கரம் சாம்பியன்ஷிப் 2022 போட்டியின் பரிசளிப்பு விழா வெள்ளிக்கிழமை (25) பனாகொட, இராணுவ உடற் பயிற்சிப் பாடசாலையில் இடம்பெற்றது.
இந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக பிரதம சமிக்ஞை அதிகாரியும் இலங்கை சமிக்ஞைப் படையணியின் தளபதியுமான மேஜர் ஜெனரல் அசோக பீரிஸ் கலந்து கொண்டார்.
போட்டியில் பதினாறு படையணிகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் போட்டியிட்டதுடன், விஜயபாகு காலாட்படையணியின் ஆண்கள் அணியினர் இலங்கை சிங்கப் படையணியினை தோற்கடித்து சம்பியன்ஷிப்பை தனதாக்கி கொண்டனர்.அதேபோன்று, இலங்கை இராணுவ மகளிர் படையணி சம்பியனாகவும், இலங்கை சமிக்ஞைப் படையணியின் மகளிர் சிப்பாய்கள் பெண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும் பெற்றனர்.
விளையாட்டுப் பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் நளின் பண்டாரநாயக்க மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகள் வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். அன்றைய பிரதம விருந்தினர் மற்றும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகள் வெற்றியாளர்களுக்கு வெற்றிக்கிண்ணங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.
இலங்கை சிங்க படையணியின் சிப்பாய் டபிள்யூ.எம் முஃபீஸ் மற்றும் இலங்கை இராணுவ மகளிர் படையணி பெண் சிப்பாய் குணதாச ஆகியோர் முறையே ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் சிறந்த வீரர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர். இலங்கை இராணுவ சமிக்ஞை படையணியின் சிப்பாய் ஆர்எம்எஸ் ரத்நாயக்க போட்டியின் சிறந்த ஆட்டக்காரராக தெரிவுசெய்யப்பட்டார்.