29th March 2022 11:44:45 Hours
நியூகல பிரதேசத்தில் உள்ள பொது வனப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட 6 முதல் 7 அடி உயரமுள்ள சுமார் 1,000 கஞ்சா செடிகளை மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 12 வது படைப் பிரிவினர் வெள்ளிக்கிழமை (25) அழித்தனர்.
12 வது படைப் பிரிவின் தளபதி பிரிகேடியர் லங்கா அமரபாலவின் பணிப்புரையின் பேரில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதுடன், 121 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் உதய சேரசிங்கவின் மேற்பார்வையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 18 வது கெமுனு ஹேவா படையினர் அவர்களது கட்டளை அதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில் பொலிஸாரின் ஆதரவுடன் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.