Header

Sri Lanka Army

Defender of the Nation

29th March 2022 18:07:41 Hours

இராணுவ ஜூடோ வீரர்கள் சாம்பியன்ஷிப்பை வெற்றனர்

மார்ச் 18, 20 திகதிகளில் நடைபெற்ற தேசிய புதியவர் ஜூடோ சாம்பியன்ஷிப் - 2022 போட்டியில் 16 விளையாட்டுக் கழகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 250 ஆண் மற்றும் பெண் போட்டியாளர்கள் பங்கேற்றதுடன் திருகோணமலை, காக்காஷியர் உள்ளக விளையாட்டு அரங்கில் குறித்த போட்டி நடைபெற்றது.

இந்த வருடப் போட்டியில், இலங்கை இராணுவ ஆண் ஜூடோ வீரர்கள் 11 தங்கப் பதக்கங்களில் 8 தங்கப் பதக்கங்களையும், அனைத்து 8 வெள்ளிப் பதக்கங்களையும் மற்றும் 22 பதக்கங்களில் 18 வெண்கலப் பதக்கங்களையும் சுவீகரித்து மொத்தம் 99 மதிப்பெண்களுக்கு 73 புள்ளிகளைப் பெற்று சாம்பியன்ஷிப்பினை வென்றனர்.

அதேபோன்று, இலங்கை இராணுவ மகளிர் அணி மற்றும் கம்பளை மகளிர் உயர்தரப் பாடசாலை அணிகள் இணை 3 ஆம் இடத்தை அடைந்தது இரண்டாம் இடங்களாகத் தரப்படுத்தப்பட்டது. இராணுவ ஆண்கள் அணி 8 தங்கம், 8 வெள்ளி மற்றும் 18 வெண்கலப் பதக்கங்களையும், இராணுவ மகளிர் அணி 1 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களையும் வென்றது.

ஞாயிற்றுக்கிழமை (20) திகதி திருகோணமலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துகோரல, அரச அதிகாரிகள், இராணுவ ஜூடோ குழுவின் உப தலைவர் பிரிகேடியர் டி.எம்.ஹெட்டியாராச்சி, இராணுவ ஜூடோ குழுவின் செயலாளர் பிரிகேடியர் டபிள்யூ.எம்.எஸ்.என்.விஜேகோன், , இராணுவ ஜூடோ குழு பிரதி செயலாளர் கெப்டன் எம்.எச்.எம்.எச். ஹுசைன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.