29th March 2022 11:57:36 Hours
பராக்கிரமபுரவில் பதவிய சி யாயா கல்லூரியில் 155 மாணவர்களுக்கு நன்கொடையாளரின் அனுசரணையுடன் இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பாடசாலை உபகரணங்கள் மற்றும் எழுதுபொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இதன்படி, தமது உறவினரான மறைந்த திரு.குணதாச ராஜபக்ஷவின் நினைவாக, இராணுவத்தினரின் அழைப்பின் பேரில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பாடசாலை உபகரணங்களுக்கான செலவினை வழங்க குடும்ப உறுப்பினர்கள் முன்வந்தனர்.
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 62 வது படைப்பிரிவின் கீழ் உள்ள 621 வது பிரகேட்டின் 14 வது இலங்கை இலேசாயுத காலாட்படையின் படையினர் செவ்வாய்க்கிழமை (22) பாடசாலை வளாகத்தில் நன்கொடை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
621 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் கீர்த்தி பெரகும், 621 வது பிரிகேடின் சிவில் விவகார அதிகாரி, 14 (தொ)வது இலங்கை இலேசாயுத காலாட்படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் சில சிரேஷ்ட அதிகாரிகள் விநியோக நிகழ்வில் கலந்து கொண்டனர்.