30th March 2022 12:45:08 Hours
முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 64 வது படைப்பிரிவு தலைமையகம், சேதன பசளைகளின் பயன்பாடு குறித்து விவசாயிகளின் அறிவை மேம்படுத்தும் வகையில், பசுமை வேளாண்மை செயல்முறை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியை மார்ச் 23 அன்று தனது தலைமையக வளாகத்தில் ஏற்பாடு செய்தது.
இத்திட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேசத்தைச் சேர்ந்த 56 விவசாயிகள் கலந்து கொண்டதுடன், ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் விவசாய ஆலோசகர்களினால் விழிப்புணர்வு செயலமர்வு நடத்தப்பட்டது. மேலும் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் பின்னர், பங்கேற்பாளர்கள் அனைவரும் 64 வது படைப்பிரிவின் மாதிரி பண்ணையை, சேதன பசளையை பயன்படுத்தி பயிரிடப்பட்ட வேளான்மையை நேரில் பார்வையிட்டனர்.
64 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் உபுல் வீரகோன் இந்த நிகழ்வை மேற்பார்வையிட்டதுடன் இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.