Header

Sri Lanka Army

Defender of the Nation

25th March 2022 20:34:23 Hours

இராணுவ துப்பாக்கி சுடும் வீரர்கள் பெரும்பான்மையான பதக்கங்களை வென்றனர்

சர்வதேச பயிற்சிக்குரிய துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பின் திறந்த பிரிவு கைத்துப்பாக்கி சாம்பியன்ஷிப் - 2022 மார்ச் 17 முதல் 20 வரை நடத்தப்பட்டதுடன் இதன் பரிசு வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை (20) பனலுவ, துப்பாக்கிச் சூட்டு திடலில் நடைபெற்றது.

இளையவர், இளைஞர், மூத்தவர் மற்றும் சிரேஷ்ட மூத்தவர் என நான்கு வயது பிரிவுகளின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இந்த சாம்பியன்ஷிப், இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை உட்பட 15 வெவ்வேறு துப்பாக்கி சுடும் கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 201 துப்பாக்கி சுடும் வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்.

இலங்கை இராணுவ துப்பாக்கிச் சுடும் வீரர்கள் 4 தங்கப் பதக்கங்கள், 10 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 1 வெண்கலப் பதக்கத்தினையும், விமானப்படையினர் 3 தங்கப் பதக்கங்களையும், 1 வெள்ளிப் பதக்கத்தினையும், 3 வெண்கலப் பதக்கங்களையும் பெற்றுக்கொண்டனர். அதேபோன்று இலங்கை கடற்படை 4 தங்கப் பதக்கங்களையும் 4 வெண்கலப் பதக்கங்களையும் வென்றுள்ளது.

இது திறந்த பிரிவு, தரநிலைப் பிரிவு, உற்பத்திப் பிரிவு, ஒளியியல் பிரிவு மற்றும் பாரம்பரிய பிரிவு ஆகியவற்றின் கீழ் நடத்தப்பட்டது.