23rd March 2022 05:51:23 Hours
இலங்கை இராணுவத்தின் சிறந்த சிறப்புப் பிரிவுகளில் ஒன்றாக அங்கீகாரம் பெற்றுள்ள கொமாண்டோ படையணியின் 42 வது ஆண்டு நிறைவு விழா நிகழ்வு மத அனுட்டானங்களுக்கு மத்தியில் பெருமிதத்துடன் கொண்டாடப்பட்டது.
படையணியின் ஆண்டு நிறைவை முன்னிட்டு படையணி மற்றும் கொமாண்டோ பயிற்சி பாடசாலைகளில் நடத்தப்பட்ட, தடகள போட்டிகளில் மார்ச் 12 ஆம் திகதி சான்றிழல் வழங்கும் நிகழ்வுடன் நிறைவடைந்திருந்தது. அதேநேரம் கணேமுல்லவில் அமைந்துள்ள படையணி தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை (13) இரவு நேரம் முழுவதுமான பிரித் பாராயண நிகழ்வொன்றும் இடம்பெற்றது. இந்நிகழ்வுகளில் கொமாண்டோ படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் கிறிஷாந்த ஞானரத்ன மற்றும் கொமாண்டோ பிரிகேட் தளபதி பிரிகேடியர் விஜித ஹெட்டியராச்சி உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
மறுதினம் (14) 42 பௌத்த பிக்குகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டதை தொடர்ந்து ஆண்டு நிறைவு விழா நிகழ்வு நிறைவடைந்தது.
அதேபோல் (14) பிற்பகல் வேளையில் தலைமைய வளாகத்தினுள் போரில் உயிர் நீத்த கொமாண்டோ படையணியின் வீரர்களை நினைவுகூறுவதற்கான நினைவேந்தல் நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்ததோடு , கொமான்டோ படையணி வீரர்களை நினைவுக்கூர்வதற்கான சின்னத்திற்கு மலர் மாலை சூட்டி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் கொமான்டோ படையணியின் சிரேஷ்ட அதிகாரிகளும் சிப்பாய்களும் கலந்துகொண்டு உயிர் நீத்த சக வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அதனையடுத்து ஆண்டு நிறைவு தினமான (மார்ச் 15) படையணி தலைமையகத்திற்கு வருகை தந்த கொமாண்டோ படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் கிறிஷாந்த ஞானரத்ன அவர்களுக்கு படையினரால் அணிவகுப்பு மரியாதையுடன் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கி மரியாதை வழங்கப்பட்டது.
இந்நிகழ்வுகளில் கொமாண்டோ பிரிகேட் தளபதி பிரிகேடியர் விஜித ஹெட்டியராச்சி, கொமாண்டோ படையணித் தலைமையகத்தின் நிலையத் தளபதி கேணல் கமால் தர்மவர்தன உட்பட நிகழ்வின் ஏற்பாட்டிற்காக பெரும் பங்களிப்பை வழங்கியிருந்த சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்துகொண்டிருந்தனர்.