Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd March 2022 06:03:57 Hours

12 வது படைப்பிரிவு தளபதியாக பிரிகேடியர் லங்கா அமரபால கடமைகளை பொறுப்பேற்பு

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள 12 வது படைப்பிரிவு தலைமையகத்தின் புதிய தளபதியாக பிரிகேடியர் லங்கா அமரபால அவர்கள் ஹம்பந்தோட்டையிலுள்ள 12 வது படைப்பிரிவு தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை (20) கடமைகளை பெறுப்பேற்றுக்கொண்டார்.

படைப்பிரிவு தலைமையகத்திற்கு வருகைத் தந்த தளபதியவர்கள் அணிவகுப்பு மரியாதையுடன் படையினரால் அழைத்து வரப்பட்டதோடு, 20 வது சிங்கப் படையணியின் சிப்பாய்களினால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து இடம்பெற்ற மத அனுட்டானங்களுக்கு மத்தியில் அவர் பதவியேற்புக்கான உத்தியோகபூர்வ ஆவணங்களில் கையொப்பமிட்டார்.

பின்னர் அவரது பதவியேற்பின் நினைவாக சிரேஷ்ட அதிகாரிகளின் அழைப்பின் பேரில் தலைமையக வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நாட்டி வைத்த அவர், அதிகாரிகள் மற்றும் படையினருக்காக ஆற்றிய உரையின் போது 12 வது படைப்பிரிவின் செயற்பாடுகளை சுமூகமாக முன்னெடுத்துச் செல்வதற்கு அவசியமான தொலைநோக்கு செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளித்தார்.

121 வது மற்றும் 122 வது பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் 12 வது படைப்பிரிவின் பிரிவின் கீழ் சேவையாற்றும் படையினரும் மேற்படி பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரிகேடியர் லங்கா அமரபால அவர்கள் புதிய நியமனத்தை பொறுப்பேற்றுக்கொள்வதற்கு முன்னதாக உளவியல் நடவடிக்கை பணிப்பகத்தின் பணிப்பாளராக நியமனம் வகித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.