Header

Sri Lanka Army

Defender of the Nation

21st March 2022 20:28:48 Hours

இராணுவ வைத்தியசாலைக்கு புதிய செவிப்புலன் ஓடியோமீட்டர் வழங்கி வைப்பு

கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் செவிப்புலன் பிரிவில் இன்னும் பயன்பாட்டில் உள்ள பயன்பாட்டிற்கு உதவாத செவிப்புலன் ஓடியோமீட்டர் சாதனத்திற்கு பதிலாக புதிய செவிப்புலன் ஓடியோமீட்டர் சாதனம் ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.

கெப்டன் கவீந்திர தசநாயக்க மற்றும் அவரது நண்பர்களின் அர்ப்பணிப்பு முயற்சியின் காரணமாக சேகரிக்கப்பட்ட நன்கொடை நிதியினை கொண்டு ரூ. 985,000/= பெறுமதியான இன்டர்-அகௌஸ்டிக்ஸ் AD226 ஓடியோமீட்டர் கொள்வனவு செய்யப்பட்டது. இவ் உபகரணத்துடன் தொடர்புடைய பாகங்களாக ஒரு மடிக்கணினி மற்றும் ஒரு பிரிண்டர் கொண்ட ஓடியோமீட்டர் கொண்டுள்ளது.

பிரிகேடியர் ( டொக்டர்) சம்பக்க அத்தநாயக்க மற்றும் வதிவிட ஆலோசகர், செவிப்புல சத்திரசிகிச்சை நிபுணர் லெப்டினன்ட் கேணல் (டொக்டர்) அக்ரம் ரஹமான் ஆகியோர் சில நாட்களுக்கு முன்னர் வைத்தியசாலையின் சார்பில் நன்கொடையைப் பெற்றனர்.

அதனை வழங்கிய நிறுவனமான ஜே.எம்.விக்கமராட்சி அண்ட் கம்பனியின் பிரதிநிதிகளும் விழாவில் கலந்துகொண்டனர். அவர்கள் சாதனத்தை அமைப்பதற்கும், ஒலியியல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கும், சாதனத்தை எவ்வாறு சரியாகப் பயன்படுத்துவது என்பது குறித்தும் உதவினர். கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் வதிவிட ஆலோசகர் வைத்தியரான லெப்டினன்ட் கேணல் (டொக்டர்) சோஹன் குரேயும் கலந்து கொண்டார்.