Header

Sri Lanka Army

Defender of the Nation

21st March 2022 20:51:13 Hours

ஆண்கள் சம்பியன்ஷிப்பினை சுவீகரித்துக் கொண்ட இராணுவ நீச்சல் வீரர்கள்

இலங்கை நீர்வாழ் விளையாட்டு ஒன்றியத்தினால் பலபிட்டிய கடற்கரையில் ஏற்பாடு செய்திருந்த தேசிய வருடாந்த 10கி.மீ திறந்த நீச்சல் சம்பியன்ஷிப் - 2022 போட்டியில் இலங்கை இராணுவ ஆண்கள் நீச்சல் அணி தொடர்ந்து 4 வது வருடமாக வெற்றியை தக்கவைத்துக்கொண்டது.நாடளாவிய ரீதியில் 8 விளையாட்டுக் கழகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, 72க்கும் மேற்பட்ட நீச்சல் வீரர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இராணுவ ஆண்கள் அணி 20 இடங்களில் 17 இடங்களைப் பிடித்தது.

பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில், இலங்கை இராணுவ நீச்சல் குழுவின் பணிப்பாளரும் பொது பணி பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே பங்கேற்பாளர்கள் அனைவரையும் ஊக்கப்படுத்தினார்.

வெற்றியாளர்களின் பெயர்கள் பின்வருமாறு.

லான்ஸ் கோப்ரல் டி.எச்.கே.எஸ்.ஐ டி சில்வா - 6 வது இலங்கை சிங்க படையணி (வௌ்ளி பதக்கம்)

லான்ஸ் கோப்ரல் ஏ எம் ஏ எஸ் அபேசிங்க – 3 வது இலங்கை கவசப் வாகன படையணி (வெண்கலப் பதக்கம்)