Header

Sri Lanka Army

Defender of the Nation

21st March 2022 20:55:40 Hours

‘ஹுஸ்ம தென துரு’ செயற்திட்டத்தின் 2 வது கட்டம் ஆரம்பிக்கப்பட்டது

மத்திய சுற்றாடல் அதிகாரசபை, சுற்றாடல் அமைச்சு மற்றும் இராணுவம் இணைந்து முன்னெடுத்த ‘ஹுஸ்மா தென துரு’ ( சுவாசம் தரும் மரங்கள்) தேசிய செயற்திட்டத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று (21) காலை புதிய ஓய்வு பூங்கா (நடை பாதை) அருகில் இடம்பெற்றது.

கௌரவ சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்க, இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் விகும் லியனகே, மற்றும் சிலர் இணைந்து சந்தன மரக்கன்றுகளை நட்டு ஆண்டு நிறைவைக் கொண்டாடினர்.ஆண்டு நிறைவு நிகழ்வின் போது, கெளரவ அமைச்சர் அவர்கள், சேதனை பசளை உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக சேவையாற்றும் இராணுவத்தினருக்கு வழங்குவதற்காக புதிய மா மரக்கன்றுகளை இராணுவ பதவி நிலை பிரதானியிடம் கையளித்தார். இராணுவத் விநியோக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் இந்து சமரகோன், இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்ல, 14 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சமந்த விக்கிரமசேன, மற்றும் சில சிரேஷ்ட அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இத்திட்டத்தின் 1 வது வேலைத்திட்டம் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் பங்கேற்புடன் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், இராணுவத் தலைமையகப் பகுதியைச் சூழவுள்ள நகர்ப்புறப் பகுதிகளில் காடுகளை வளர்ப்பதற்கும் சுற்றுப்புறங்களை அழகுபடுத்துவதற்கும் இராணுவத்தின் முயற்சிகளுக்குப் பாராட்டுக்குரிய அங்கீகாரம் வழங்கப்பட்டது.

திங்கட்கிழமை இடம்பெற்ற இந்த நிகழ்வின் போது அனைத்து சிரேஷ்ட அதிகாரிகளும் ஆர்வத்துடன் சந்தன மரக்கன்றுகளை மற்றவர்களுடன் இணைந்து நட்டனர்.இந்த திட்டம் கடந்த ஆண்டு தொற்றுநோய்கள் உச்சகட்டத்தில் இருந்த வேளை ஆரம்பிக்கப்பட்டதுடன் படையினரால் இந்த நடவடிக்கைகளை சரியாக பராமரிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.