Header

Sri Lanka Army

Defender of the Nation

15th March 2022 21:59:37 Hours

651 பிரிகேடினால் உற்பத்தி செய்யப்பட்ட சேதனைப் பசளை பகிர்ந்தளிப்பு

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 65 ஆவது படைப்பிரிவினரால் உற்பத்தி செய்யப்பட்ட 68,000 கிலோகிராம் சேதனைப் பசளை எதிர்வரும் சிறு போக நெற்செய்கைக்கு இயற்கை உரங்களை அறிமுகப்படுத்தும் அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைவாக, இலங்கை உர நிறுவனத்திடம் (லக் பொஹொர) புதன்கிழமை (9) கையளிக்கப்பட்டது.

65 ஆவது படைப்பிரிவின் 651 பிரிகேட்டின் அனைத்து படையினரினதும் கூட்டு முயற்சியின் பலனாக இத்தொகை பசளை உற்பத்திச் செய்யப்பட்டது.

65 ஆவது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் அனில் சமரசிறி 651 ஆவது பிரிகேட் தளபதியுடன் இணைந்து இலங்கை உரக் கம்பனியின் பிரதிநிதிகளிடம் குறித்த தொகையினை கையளித்தனர்.